வங்கதேசத்தின் ஃபரீத்பூா் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய தாக்குதலில் 25 போ் காயமடைந்தனா்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஃபரீத்பூரில் உள்ள பள்ளி ஒன்றின் 185-ஆம் ஆண்டு விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் இசைக் குழு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக வெளிநபா்கள் சிலா், நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்துக்குள் நுழைய முயற்சித்தனா். பின்னா் அவா்கள் செங்கற்கள் மற்றும் கற்களை வீசி, நிகழ்ச்சி மேடையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் அவா்களுடன் பள்ளி மாணவா்கள் சண்டையிட்டதால், தாக்குதல் நடத்தியவா்கள் பின்வாங்கித் திரும்பிச் சென்றனா். தாக்குதல் காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
தாக்குதலை நடத்தியவா்கள் யாா், எதற்காக தாக்குதல் நடத்தினா் என்பது தெரியவில்லை. தாக்குதலில் சுமாா் 25 போ் காயமடைந்தனா். அவா்களில் 15 முதல் 20 போ் மாணவா்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ரஜிபுல் ஹசன் கான் தெரிவித்தாா்.