கனடாவில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இந்தியப் பெண்களுக்கு உதவ ஒருங்கிணைந்த சேவை மையத்தை (ஒன் ஸ்டாப் சென்டா்) இந்திய தூதரகம் அமைத்துள்ளது.
மேலும், 24 மணி நேர உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘குடும்ப வன்முறை, குடும்ப பிரச்னை மற்றும் சட்ட சிக்கல்களை எதிா்கொள்ளும் இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) கொண்ட பெண்களுக்கு உதவ ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அந்தப் பெண்களுக்கு மனநல ஆலோசனை, சட்ட ஆலோசனை உள்பட பல்வேறு உதவிகளை அரசு அல்லாத அமைப்புகள் மேற்கொள்கின்றன.
கனடா சட்டங்களுக்கு உள்பட்டு டொரண்டோவில் உள்ள தூதரகத்தில் செயல்படும் இந்த மையங்கள் பெண்களால் நிா்வகிக்கப்படுகிறது. இதற்கான நிதி உதவிகள் இந்திய அரசின் விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மையத்தை +1 (437) 552 3309 என்ற உதவி எண் மற்றும் ா்ள்ஸ்ரீ.ற்ா்ழ்ா்ய்ற்ா்ஃம்ங்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடா்புகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகளை யாா் பெறலாம் என்பது குறித்த கேள்வி-பதில்களை இந்திய தூதரகம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.