முகப்பு
சென்னை

தொழில்நுட்பக் கோளாறு: பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 30 டிசம்பர், 2025 at 8:02 PM
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்).
பகிர்:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பச்சை வழித்தடத்தில் (அண்ணா நகா், கோயம்பேடு வழியாக) விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் ஆலந்தூா் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தை பயன்படுத்தி விமான நிலையம் செல்லலாம். கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பப் பணியாளா்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா். விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு, சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →