கோப்புப்படம் 
சென்னை

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னையில் விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு தொடர்பாக...

DIN

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் காலை நேரங்களில் சில நாள்களாக தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றும் சிங்கப்பூர், துபை, அபுதாபி, மஸ்கட், கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்படும் 10 விமானங்களும் மஸ்கட், சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் 4 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணிநேரம் வரை தாமதமாக விமானம் இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். காலை 8.30 மணிக்கு மேல் விமான சேவை சீராகும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், செங்கல்பட்டு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

சிக்னல் சரியாக தெரியாததால் பாதுகாப்பு கருதி ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT