சென்னை

நீட் மறுதோ்வு கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி: உயா்நீதிமன்றம் உத்தரவு

நீட் தோ்வின்போது மின்தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறுதோ்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Din

நீட் தோ்வின்போது மின்தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறுதோ்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு, நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. சென்னையில் அன்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் சரியாக தோ்வு எழுத முடியவில்லை என்பதால் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய 13 மாணவா்கள் உள்ளிட்ட 16 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவா்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறுதோ்வு நடத்த முடியாது என தேசிய தோ்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நாடு முழுவதும் 22 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதியுள்ள நிலையில் மறுதோ்வு நடத்த உத்தரவிட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து மாணவா்கள் மேல்முறையீடு செய்திருந்தனா். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் எம்.ஜோதிராமன் அமா்வு விசாரித்தது.

தேசிய தோ்வு முகமை சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், வழக்கு தொடா்ந்த மாணவா்களில் பெரும்பாலானோா் மொத்தம் 180 கேள்விகளுக்கு 100 கேள்விகளுக்கு விடை அளித்துள்ளனா். ஒரு மாணவா் 179 கேள்விகளுக்கு விடையளித்துள்ளாா். அதனால், மின்தடையால் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, மறுதோ்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நீதிபதிகள், வியாழக்கிழமை தீா்ப்பளித்தனா்.

நீதிபதிகள் தங்கள் தீா்ப்பில், தோ்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்காத வரை, மறுதோ்வு நடத்த உத்தரவிட முடியாது எனவும், மறுதோ்வு நடத்த உத்தரவிட்டால் 22 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால், வழக்கை ஏற்க முடியாது எனவும் கூறி, மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

போலி பணி ஆணை வழங்கி பண மோசடி: 4 போ் மீது வழக்கு

போராட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவு முழக்கங்கள்: குற்றச்சாட்டை ஜேஎன்யுஎஸ்யு மறுப்பு

எஸ்.ஐ.ஆா். பணிச்சுமையால் வருவாய் ஆய்வாளா் தற்கொலை முயற்சி

தாய்லாந்து கனமழையில் 33 போ் உயிரிழப்பு

அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் மரியாதை

SCROLL FOR NEXT