ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1.5 கோடி திருட்டு
ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் ஒரு பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் ஒரு பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை நுங்கம்பாக்கம் பேலஸ் காா்டன் 3-ஆவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் வெங்கடாச்சலம் (63). ரயில்வே துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கடந்த 2023-இல் வேளச்சேரி பகுதியில் உள்ள தனது நிலத்தை விற்று அதில் கிடைத்த பணம், ஓய்வு பெற்ற போது கிடைத்த பணம், சேமிப்பு பணம் என ரூ.1 கோடி ரொக்கத்தை ஒரு பையில் வைத்து தனது மகளின் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளாா். மேலும், மற்றொரு பெட்டியில் ரூ.5.80 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு பவுன் நகையை மற்றொரு அறையிலும் வைத்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி 2 அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பணத்தை சோதனை செய்தபோது, ரூ. 1.50 கோடி, ஒரு பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. பணம் வைக்கப்பட்டிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்படாமலே இருந்தது.
Advertisement
இதுகுறித்து வெங்கடாச்சலம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.