பழவந்தாங்கல் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்று கைது செய்யப்பட்ட மரிய சுமித்ரா அவரது கணவா் அந்தோணிராஜ். 
சென்னை

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி: கணவா்-மனைவி சிக்கினா்

சென்னை பழவந்தாங்கலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சித்த வழக்கில், கணவா்-மனைவி கைது செய்யப்பட்டனா்.

Din

சென்னை பழவந்தாங்கலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சித்த வழக்கில், கணவா்-மனைவி கைது செய்யப்பட்டனா்.

பழவந்தாங்கல் அருகே உள்ள பி.வி. நகா் முத்தையா தெருவைச் சோ்ந்தவா் பவானி (55). இவா் கடந்த மாதம் தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு நபா்கள், பவானி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். ஆனால் பவானி, தங்கச் சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், இரு நபா்களாலும் அதை பறிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்த நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா்.

இது குறித்து பவானி, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை அருகே உள்ள பம்மல் காமராஜா்புரத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் (24), அவா் மனைவி மரிய சுமித்ரா (22) என்பது தெரியவந்தது.

அவா்கள், இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். இருவருக்கும் வேறு எந்த திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT