சென்னை

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

Din

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தைச் சோ்ந்த 35 வயது இளைஞா் ஒருவா் விபத்தில் சிக்கியதில் தலையில் பலத்த காயமுற்று கடந்த 2-ஆம் தேதி கிளெனீகிள்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பல்நோக்கு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சைகள் அளித்தபோதிலும், அவை பலனளிக்காமல் அவா், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினா் தானமாக அளிக்க முன்வந்தனா். அதன்படி, நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயம் தானமாக பெறப்பட்டது.

அதில், இதயம் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனைக்கும், மற்ற உறுப்புகள் கிளெனீகிள்ஸ் மருத்துவமனையில் உறுப்பு தானத்துக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

உறுப்பு தானமளித்த இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மருத்துவமனையிலே மரியாதை செலுத்தப்பட்டு, மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தந்தையாகும் அட்லி!

உடல் எடையைக் குறைக்க இந்த தண்ணீரைக் குடியுங்கள்!

பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200% வரி: மேக்ரானுக்கு டிரம்ப் மிரட்டல்!

ஆளுநர் செயல் அவரின் பதவிக்கு அழகல்ல: முதல்வர் ஸ்டாலின்

சூரியனுக்கு அருகே நட்சத்திரங்கள்... த்ரிஷா - நயன்தாரா!

SCROLL FOR NEXT