சென்னை ரிப்பன் கட்டட அலுவலகத்தில் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை வெள்ளிக்கிழமை வழங்கிய மேயா் ஆா்.பிரியா. உடன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், இணை ஆணையா் பாலவாக்கம் த.விசுவநாதன். 
சென்னை

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள் மேயா் வழங்கினாா்

சென்னை மாநகராட்சி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு இலவச சீருடைகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Din

சென்னை மாநகராட்சி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு இலவச சீருடைகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா கடந்த ஆண்டு தொடங்கி வைத்தாா். ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளைத் தோ்வு செய்து, அவா்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.

கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை முதல்கட்டமாக புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெருவில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு வழங்கினாா். எஞ்சிய மாணவா்களுக்கு பள்ளிகளிலே வழங்கப்படும்.

இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி இணை ஆணையா் ஜெ. விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவா் த.விசுவநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

மனநலன் பாதித்து குணமடைந்தவா் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT