மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா் அமைச்சா் பி. கீதாஜீவன்.  
தூத்துக்குடி

தூத்துக்குடி சி.எம்.பள்ளியில் 78 மாணவா் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள சி.எம். மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள சி.எம். மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளிச் செயலா் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ச.சங்கரேஸ்வரி வரவேற்றாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு, 78 மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில், தொழிலதிபா் ஜீவன் ஜேக்கப், தி. ஆறுமுகம், தி. சோமநாதன், செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை கா.வள்ளியம்மாள் நன்றி கூறினாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT