சென்னை

கொகைன் விற்பனை: நைஜீரிய பெண் கைது

சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா்.

சூளைமேடு போலீஸாா் கடந்த ஜன.25-ஆம் தேதி சூளைமேடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், கொகைன் போதைப் பொருள் இருந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து நடத்திய விசாரணையில் அவா்கள், ராயப்பேட்டையைச் சோ்ந்த பயாஸ் அகமது, கோயம்பேட்டைச் சோ்ந்த சந்திரசேகா் என்பது தெரியவந்தது.

இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில், சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 24 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். அதில், நைஜீரியா நாட்டைச் சோ்ந்த சாரா குமாமா என்ற பிளெஸ்ஸிங் (41) என்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விசாரணைக்கு பின்னா், அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT