கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை. 
சென்னை

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்

Din

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பூக்கள், மளிகைப்பொருள்கள் மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள மலா் சந்தையில் இரவு நேரங்களில் வியாபாரிகள், பணியாளா்கள் அல்லாத, மது அருந்தி வரும் நபா்கள் வியாபாரிகளுடன் தகராறில் ஈடுபடுவதுடன், கைப்பேசி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை திருடிச் செல்வதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இது குறித்து வியாபாரிகள் சிலா் கூறும்போது, கோயம்பேடு மலா் சந்தையில் மதுபோதையில் வருவோரைகட்டுப்படுத்தும் விதமாக, சந்தை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த புறக்காவல்நிலையம் செயல்படாமலே இருந்து வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தையில் இரவு நேர ரோந்து பணியை அதிகரிப்பதுடன், புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனா்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT