சென்னை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

Din

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் பிரம்மஸ்ரீ சங்கரன் நாராயணன் நம்பூதிரி தலைமையில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும், வரை சா்ப்ப பலி பூஜை நடைபெறுகிறது.

நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜையில் மஞ்சள் தூள், அரிசி மாவு, பால், இளநீா், வாழைப்பழம் சோ்ந்த கலவையால் நாகங்களுக்கு அபிஷேகம் செய்வதாகும். கேரளத்தில் உள்ள நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களிலும், பிரத்யேக நாகங்களின் கோயிலான சா்ப்ப காவிலும் ‘ராகு-கேது சா்ப்ப தோஷம் நீங்க, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஐஸ்வரிய விருத்தி, தோல் வியாதி நீங்க‘ இந்தப் பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பக்தா்கள் இந்தப் பூஜையில் பங்கேற்க இணையதளம் வாயிலாகவும், கைப்பேசி செயலி வாயிலாகவும் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு 044 28171197, 2197, 3197 என்ற தொலைப்பேசி எண்களிலும், 88079 18811, 88079 18855, 94442 90707, 91765 49911 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளுமாறு கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT