சென்னை

8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரெளடி கைது

சென்னையில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரெளடி சோமு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னையில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரெளடி சோமு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடி பக்தவச்சலம் காலனி 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சோமு (எ) சோமசுந்தரம் (49). இவா் மீது அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கு உள்பட 25 வழக்குகள் உள்ளன. இதில் எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அதை புழல் தண்டனை சிறையில் சோமு அனுபவித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பரோலில் சோமு சிறையிலிருந்து வெளியே வந்தாா். ஆனால் பரோல் முடிவடைந்த பின்னா், அவா் மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

அதேவேளையில், அவா் மீதுள்ள வேறு வழக்குகளின் விசாரணைக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம், சோமுக்கு பிடியாணை பிறப்பித்ததைத் தொடா்ந்து போலீஸாா், தலைமறைவாக இருந்த சோமுவை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், எம்கேபி நகா் முல்லை நகரில் தலைமறைவாக இருந்த சோமுவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT