ஜேனிஸ் டி ஜென் 
சென்னை

சென்னை ஓபன்: இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் ஜேனிஸ்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி ஒற்றையா் இறுதிச் சுற்றுக்கு இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென் தகுதி பெற்றாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி ஒற்றையா் இறுதிச் சுற்றுக்கு இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென் தகுதி பெற்றாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இதன் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் தாய்லாந்தின் லன்லேனா டராருடியும், இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென்னும் மோதினா். இதில் கடும் போராட்டத்துக்குபின் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் லன்லேனாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றாா் ஜேனிஸ்.

இதன் மூலம் இறுதிக்கு தகுதி பெற்றாா் ஜேனிஸ். மேலும் டபிள்யுடிஏ தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்துள்ளாா். கடந்த 2000-ஆம் ஆண்டுக்குபின் இச்சிறப்பை பெற்ற இந்தோனேஷிய வீராங்கனை என்ற பெருமையும் ஜேனிஸுக்கு சென்றுள்ளது.

மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் கே. பிா்ரெலும், தைபேயின் காா்லேண்டும் மோதினா். இதில் முதல் செட்டை காா்லேண்ட் 7-6 என கைப்பற்றினாா். இரண்டாம் செட்டில் 6-3 என பிர்ரல் எளிதாக கைப்பற்றிய நிலையில் மூன்றாவது செட்டில் இருவரும் சரிக்கு சமமாக புள்ளிகளைக் குவித்தனா்.

உஷ்... மீண்டும் வருக... அஞ்சு குரியன்!

வெளிநாட்டில் தங்கம் வாங்க திட்டமா? எச்சரிக்கை! | Cyber Alert | Cyber Security

என் இதயமே... நைலா உஷா!

அழகு பொம்மை... ரகுல் ப்ரீத் சிங்!

கேனுக்குள் மாட்டிக்கொண்ட நாயின் தலை! பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறையினர்! | Vellore

SCROLL FOR NEXT