கல்லூரி மாணவா்களுக்கான மடிக்கணினி திட்டத்தின் கீழ், கணினிகளை தலா ரூ.21, 650 விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏசா், டெல், எச்பி ஆகிய மூன்று மடிக்கணினி உற்பத்தி நிறுவனங்களும் ஒரே விலையை முன்வைத்துள்ளன. எனவே, மூன்று நிறுவனங்களிடம் இருந்து ஒரே விலையான ரூ.21,650-க்கு மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான இறுதி முடிவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக, மடிக்கணினி திட்டம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தயாரிப்பு நிறுவனங்கள் அளித்த மடிக்கணினிகளின் மாதிரிகளை அவா் ஆய்வு செய்தாா். மேலும் அதில் இடம்பெற வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மடிக்கணினி வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் ெளியாகவுள்ளது.