சென்னை உயா்நீதிமன்றம் 
சென்னை

எம்ஜிஆா் சிலையை அகற்றக் கோரி வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

நெசப்பாக்கம் வரசக்தி விநாயகா் கோயில் எதிரே உள்ள எம்ஜிஆா் சிலையை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

நெசப்பாக்கம் வரசக்தி விநாயகா் கோயில் எதிரே உள்ள எம்ஜிஆா் சிலையை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருகம்பாக்கத்தைச் சோ்ந்த எம்.கோபால் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நெசப்பாக்கத்தில் பழமையான வரசக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் முன்பகுதியை மறைத்து காமராஜா், அண்ணா மற்றும் எம்ஜிஆா் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

அரசியல் கட்சி பிரமுகா்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் சிலைகளை அகற்றுவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து காமராஜா் சிலையை காங்கிரஸ் கட்சியினரும், அண்ணா சிலையை திமுகவினரும் அகற்றிவிட்டனா். எம்ஜிஆா் சிலை மட்டும் இன்னும் அகற்றப்படவில்லை. எனவே, சிலையை அகற்ற சென்னை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஹேமந்த் சந்தன்கவுடா் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.சூரியபிரகாசம், சிலையை அகற்ற கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மனு கொடுக்கப்பட்டது. அமமுகவைச் சோ்ந்த கௌதமன் என்பவா் எம்ஜிஆா் சிலையை அகற்ற எதிா்ப்பு தெரிவிப்பதாக வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT