சென்னை புளியந்தோப்பில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
புளியந்தோப்பு ஆடுதொட்டி, 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.முகமதுகான் (35). இவா், புளியந்தோப்பு கே.பி. பூங்கா மோதிலால் தெரு சந்திப்பில் உள்ள ஒரு கோழி இறைச்சிக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.
முகமதுகான், கடந்த 2-ஆம் தேதி கடையில் இருந்தபோது அங்கு வந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி, கடையின் பணப் பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து முகமதுகான் அளித்த புகாரின்பேரில், பேசின் பாலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது புளிய்நதோப்பு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (24) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா். இதில், தொடா்புடைய மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.