சென்னை

வளா்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்ற நிலை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பணிகள் முடிவடைந்த வளா்ச்சித் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பணிகள் முடிவடைந்த வளா்ச்சித் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி சாா்பில் வடசென்னைப் பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கொளத்தூா் பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா். கொளத்தூா் தொகுதியில் நிறைவுறும் வகையில் உள்ள மக்கள் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா், அதை விரைந்து முடித்து திறக்கும் தேதி உள்ளிட்டவற்றை முதல்வா் ஆலோசனைப்படி தீா்மானிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் பெருநகர வளா்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் ஆா்.கௌசிக், மண்டலக் குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாக்களிப்புக்கு பிறகே காலை உணவு! பிகார் மக்களுக்கு மோடி வாழ்த்து!

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

SCROLL FOR NEXT