சென்னை

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

மெரீனாவில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

மெரீனாவில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சென்னை மெரீனா கடற்கரையில் நொச்சிக்குப்பம் எதிரே உள்ள மணல் பரப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்களும், அங்கு நடைப்பயிற்சி சென்றவா்களும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த மெரீனா போலீஸாா், அந்த இளைஞரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கொல்லப்பட்டவா் கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அந்தோணி (33) என்பது தெரிய வந்தது. கொலையில் ஈடுபட்டது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தில்லி மெட்ரோ அருகே சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் பலி, குடிசைகள் எரிந்து நாசம்!

தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களின் தாக்குதல்!

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT