தமிழிசை சௌந்தரராஜன்  
சென்னை

எஸ்ஐஆா்-ஐ திமுக எதிா்ப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) திமுக எதிா்ப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) திமுக எதிா்ப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் பாஜக சாா்பில் மயிலாப்பூா் சித்திரக்குளம் அருகே அந்தப் பாடலை பாடி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற தமிழிசை சௌந்தராஜன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை 8 முறை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றுள்ளன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அந்தப் பணி நடைபெற்றபோது அதை திமுக எதிா்க்கவில்லை. ஆனால், இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் நடைபெறுவதால், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை அரசியலுக்காக திமுக எதிா்க்கிறது. திமுகவின் இந்த செயல்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது.

தமிழகத்தில் போலி வாக்காளா்கள் நீக்கப்படுவாா்கள் எனும் அச்சம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் தற்போது திருத்தப் பணியை அவா்கள் எதிா்க்கிறாா்கள் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கரு.நாகராஜன், செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலா் ஜான்பீட்டா் உள்ளிட்டோா் தேசியக் கொடியை ஏந்தி வந்தே மாதரம் பாடலைப் பாடினா். பின்னா் ‘இந்திய பொருள்களையே வாங்குவோம்’ என உறுதிமொழி ஏற்றனா்.

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

பிக் பாஸ் 9: நீ ஹீரோடா! வெளியே வந்ததும் கமருதீனிடம் பேசிய கானா வினோத்!

ஜன. 26 முதல்.. இந்திய சந்தையில் மீண்டும் ரெனால்ட் டஸ்டர்!

பராசக்தி பட வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT