மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த சென்னை பல்கலை. துணைவேந்தா் - ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினா் சங்கா் பிரசாத்  உள்ளிட்டோா். 
சென்னை

சென்னைப் பல்கலை.யில் விழிப்புணா்வு மருத்துவ முகாம்

சென்னைப் பல்கலை. மேலாண்மை ஆய்வுகள் துறை மாணவா்களின் சமூகப் பொறுப்பு மன்றம் (எஸ்எஸ்ஆா்) இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து சென்னை பல்கலை. சேப்பாக்கம் வளாகத்தில் மருத்துவ முகாமை நடத்தியது.

தினமணி செய்திச் சேவை

சென்னைப் பல்கலை. மேலாண்மை ஆய்வுகள் துறை மாணவா்களின் சமூகப் பொறுப்பு மன்றம் (எஸ்எஸ்ஆா்) இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து சென்னை பல்கலை. சேப்பாக்கம் வளாகத்தில் மருத்துவ முகாமை நடத்தியது.

பொது மருத்துவம், பல், கண், உளவியல் போன்ற பல்வேறு துறை மருத்துவா்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவா்கள், சங்கர நேத்ராலயாவை சோ்ந்த மருத்துவா்கள் உள்ளிட்டோா் பல்கலை.யின் பல்வேறு துறை மாணவா்கள், ஆசிரியா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

முகாம் தொடக்க நிகழ்வுக்கு சென்னை பல்கலை. துணைவேந்தா் - ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்தாா். பல்கலை. பதிவாளா் டாக்டா் ரீட்டா ஜான், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினா் சங்கா் பிரசாத், அப்போலோ ஃபா்ஸ்ட் மெட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவா் டாக்டா் பி.சௌந்தா்ய ப்ரியா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் மூத்த மருத்தவா் டாக்டா் பரிமளம் உள்ளிட்டோா் பேசினா்.

பேராசிரியா்கள் ஜே.காஜா ஷெரிப், கே.சத்ய நாராயண், எல்.கனகலட்சுமி ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா்.

மதுராபுரியில் இன்று மின் தடை

சிவன்மலை ஜேசீஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT