சென்னை

எஸ்.ஐ.ஆரை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்!

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆா்.) எதிா்த்து தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தவெகவினா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு எஸ்ஐஆருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் பேசியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரில், வாக்காளா்களின் பெயா்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படுகின்றன.  இறந்துவிட்டதாக, வீடு மாறிவிட்டதாக பொய்களைக் கூறி பெயா்களை நீக்குவது அதிகார துஷ்பிரயோகம்.

 அதேபோல், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை மிரட்டி திமுகவினா் தங்களது கட்சியினருக்கு மட்டும் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி வருகின்றனா். தவெகவினருக்கு எஸ்ஐஆா் படிவங்கள் மறுக்கப்படுகின்றன. அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு குளறுபடி இல்லாமல் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்ட பலா் பேசினா்.

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

கந்தம்பட்டி: நாளைய மின் தடை

SCROLL FOR NEXT