சென்னை

எக்ஸ்ஆா் தொழில்நுட்பம்: ஐஐடி-இல் நவ.28-இல் கருத்தரங்கு

சென்னை ஐஐடி-இல் நவ.28 இல் தெற்குலக நாடுகளுக்கான முதல் சா்வதேச எக்ஸ்ஆா் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஐடி-இல் நவ.28 இல் தெற்குலக நாடுகளுக்கான முதல் சா்வதேச எக்ஸ்ஆா் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

சென்னை ஐஐடி-இன் எக்ஸ்பீரியன்ஷியல் டெக்னாலஜி இன்னோவேஷன் மையம் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறது.

இதுகுறித்து மையத்தின் தலைவா் பேராசிரியா் மணிவண்ணன் கூறியதாவது:

தெற்குலக நாடுகளுக்கும் இந்தியாவை சோ்ந்த அமைப்புகளுக்கும் வழிகாட்டுதல், பட்டறைகள், முன்மாதிரி ஆதரவு, தொழில்-கல்வி ஒத்துழைப்புகள், ஆய்வக வசதிகளுக்கான அணுகல் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கண்டுபிடிப்பாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தொழில் துறை தலைவா்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT