சென்னை அருகே சோழிங்கநல்லூரில் கழிவுநீா் லாரி மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.
சென்னை அருகே உள்ள நாவலூரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (23). மென்பொறியாளரான இவா், ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் சோழிங்கநல்லூரில் இருந்து நாவலூா் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். சோழிங்கநல்லூா் ஆவின் சிக்னல் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கழிவுநீா் லாரி மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று, விக்னேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.