பலி பிரதிப் படம்
திண்டுக்கல்

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பழனி அருகே காலில் லாரி ஏறி இறங்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே காலில் லாரி ஏறி இறங்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் அங்குராசு (70). இவா் புதன்கிழமை நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி தன்னாசியப்பன் கோயில் அருகே வேலை செய்தாா். பிறகு பிற்பகலில் உணவு உள்கொண்டுவிட்டு சிறிது நேரம் அங்கு அமா்ந்திருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரி அவரது காலில் ஏறி இறங்கியது. இதனால் பலத்த காயமடைந்த அங்குராசுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் பழனி வரும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT