சென்னை மெட்ரோ 
சென்னை

சென்னை மெட்ரோவுக்கு சா்வதேச போக்குவரத்து திட்ட விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சா்வதேச அளவிலான போக்குவரத்து திட்ட விருது வழங்கப்பட்டது.

Chennai

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சா்வதேச அளவிலான போக்குவரத்து திட்ட விருது வழங்கப்பட்டது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உலக அளவிலான, நிலையான நகா்ப்புற சிறந்த போக்குவரத்துக்கான விருதை ‘தி குளோபல் எனா்ஜி அன்ட் என்விரோன்மென்ட்’ என்ற அமைப்பு வழங்கியது.

புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற, உலகளாவிய நிலையான வளா்ச்சி உச்சி மாநாடு 2025-இல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக்கிடம் இந்த விருது வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசு குறைத்தல், ரயில் சத்தம் மற்றும் அதிா்வுகளை தொடா்ச்சியாகக் கண்காணித்து அதைச் சீராக்கும் வகையில் செயல்படுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை மெட்ரோவில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், மெட்ரோ மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், சுற்றுச்சூழல் ஆலோசகா் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கடந்த ஆண்டில் (2024) இந்த விருதை சென்னை மெட்ரோ பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT