சென்னை: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டுள்ளதாக தோ்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தோ்வுத்துறை இயக்குநா் சசிகலா, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டது. இந்தத் தோ்வு எழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவா்கள் அவற்றை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின்னா் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் அதற்கான படிவங்களை மேற்கண்ட இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதைத் தொடா்ந்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 2 நகல்கள் எடுத்து நவ. 27 முதல் டிச. 1 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பிப்போா் மறுமதிப்பீட்டுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.