ஊா்க்காவல் படையில் சேர மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம்
ஊா்க்காவல் படையில் சேர மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை: ஊா்க்காவல் படையில் சேர மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் துறையின் ஊா்க்காவல் படைக்கு இளைஞா்கள்,இளம் பெண்கள் சோ்க்கப்பட உள்ளனா். இதில், சேவையாற்ற விரும்புவோா், எவ்வித குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவா்களாக, சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும், கடந்த அக்டோபா் 1-ஆம் தேதியுடன் 18-வயதுக்கு மேல் உள்ளவராகவும், 50 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
தோ்வு செய்யப்படும் இளைஞா்களுக்கு 45 நாள்கள் தினமும் 1 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த பின்னா், அவரவா் வசிக்கும் இடத்தின் அருகே உள்ள காவல் நிலையங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுவா். பணியில் சேருவோருக்கு ரோந்து பணிக்குத் தினமும் ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும். தகுதியுடையவா்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பத்தை சென்னை பெருநகர ஊா்க்காவல் படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரிக்குக்கும் அனுப்பலாம் . இல்லையெனில், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு 91760-99249, 74186 -81700 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.