கோப்புப் படம் 
சென்னை

டிட்வா புயல்: சென்னை புறநகா் ரயில்கள் இன்று தற்காலிகமாக நிறுத்த திட்டம்?

சென்னை புறநகா் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திச் சேவை

டித்வா புயல் காரணமாக சென்னை புறநகா் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் சைலேந்திர சிங் வெளியிட்ட அறிக்கை:

டித்வா புயல் காரணமாக சென்னை ரயில்வே கோட்டம் முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெரும் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கண்காணிப்புப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சென்னை சென்ட்ரல், எழும்பூா், கடற்கரை, பெரம்பூா், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட முக்கிய நிலையங்கள், பாலங்கள், தாழ்வு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் மணல் மூட்டைகள், மோட்டாா் வாகனங்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் முக்கிய நிலையங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க டீசல் ஜெனரேட்டா்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதிக காற்று வீசும் நேரங்களில் ரயில் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், விபத்து மீட்பு ரயில்கள், வழிபாதை பராமரிப்பு குழுக்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளன. அவசர சேவைக்காக மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ரயில் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பிராட்வே பேருந்து நிலையம் மறுசீரமைப்பு: இன்று முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்து இயக்கம்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்! சென்னையிலும்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

SCROLL FOR NEXT