சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலை பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பேருந்து ஓட்டுநா்கள் மட்டுமன்றி, அனைவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): சிவகங்கை மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தொடா் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணா்வு அரசு ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், தவெக தலைவா் விஜய், ஐஜேக தலைவா் ரவிபச்சமுத்து, காா்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட அரசியல் தலைவா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.