சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உடும்பை அடித்துக் கொன்ற மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மின் பணியாளரை வனத் துறையினா் கைது செய்தனா்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 அடி நீளம் கொண்ட உடும்பின் உடல் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் ஒருவா் உடும்பை அடித்துக் கொன்ற விடியோ காட்சி சமூக ஊடகத்தில் பரவியது. இது குறித்து விசாரணை நடத்திய வனத் துறையினா், உடும்பை அடித்துக் கொன்ாக மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மின் பணியாளா் பாலச்சந்திரனை சனிக்கிழமை கைது செய்தனா்.