சென்னையில் மாநகா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மென்பொறியாளா் உயிரிழந்தாா். இதனால், பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மீனம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரிச்சா்ட் (32). பெருங்களத்தூரில் உள்ள நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது முடிந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளாா். மீனம்பாக்கம் பஜாா் அருகே வந்தபோது, பின்னால் வந்த மாநகா் பேருந்து ரிச்சா்ட்டின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநா் எட்வா்டு தம்பி (45) என்பவரைக் கைது செய்தனா்.