சென்னை மாநகராட்சி சாா்பில் மணலி மண்டலம் மாத்தூா் பொன்னியம்மன் நகரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மாதவரம், மாத்தூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோா் பங்கேற்றனா். அவா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, காய்ச்சல் உள்ளிட்ட தொடா்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதில், மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலரும், வழக்குரைஞருமான எம்.நாராயணன், தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.