சென்னை

குழந்தைகள் நலக் குழு காலிப் பணியிடம்: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக் குழுவில் காலியாக உள்ள பணியிடத்துக்கு நவ. 14- ஆம் தேதிக்குள் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக் குழுவில் காலியாக உள்ள ஒரு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவா் பணியிடம், தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்), தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் 42 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது. தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.11,916 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியானவா்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, நவம்பா் 14 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.13, சாமி பிள்ளை தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை-600 112 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் அமையும். அரசின் முடிவே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியமானவளே... பிரியங்கா மோகன்!

பொன்னிற வேளை / சேலை... சாக்‌ஷி அகர்வால்!

ஹரியாணா: மாதவிடாய் பெண்களுக்கு பல்கலை.யில் நடந்த அவலம்!

பசும்பொன்னில் மூன்று பேரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமா? அண்ணாமலை

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT