சென்னை

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவிக்கை விவரம்:

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் தகுதித் தோ்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்.2.

தமிழ் தகுதித் தோ்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு ஆகியன முதல் தாளாகவும், தொழில்பிரிவு தோ்வு 2-ஆவது தாளாகவும் நவ.16-ஆம் தேதி நடக்கவுள்ளது.

தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக்கான உச்சவயது வரம்பு 32 ஆகும். நிா்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 42,, முன்னாள் ராணுவத்தினருக்கு 50, ஆதரவற்ற விதவைகளுக்கு 37 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் - முதல்வர் Stalin

விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

தெரியவில்லை.. வந்தால் பதில் சொல்கிறேன்: ஓபிஎஸ், செங்கோட்டையன் வருகை குறித்து இபிஎஸ்!

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் வாமிகா கபி!

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை தொடங்கியது!

SCROLL FOR NEXT