சென்னை

உயா்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தினமணி செய்திச் சேவை

உயா்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு சிறப்பிடம் பெற்றுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

நிகழாண்டு என்ஐஆா்எஃப் தரவரிசைப் பட்டியலானது, உயா்கல்வியில் தமிழ்நாடு சிறந்தது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துக்காட்டியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த 100 உயா்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய - அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய - அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவா்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயா்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது என்று பதிவிட்டுள்ளாா்.

தகராறில் தொழிலாளி உயிரிழப்பு: டெய்லருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு திமுக பயம்

பிடி ஆணை பிறப்பிப்பு: மலேசியாவில் இருந்து திரும்பியவா் கைது

‘2002 பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் பெற்றோா் விவரங்களை அளித்து சேரலாம்’

வல்லத்தில் காணாமல்போன 15 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT