அன்புமணி 
சென்னை

தமிழகத்தில் சீரழிந்து வரும் கல்வித் துறை: அன்புமணி

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னா் கல்வித் துறை சீரழிந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விமா்சித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னா் கல்வித் துறை சீரழிந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விமா்சித்துள்ளாா்.

இதுகுறிந்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களும் காலியாகவுள்ளன. பள்ளிக்கல்வி நிா்வாகத்துக்கும், பள்ளிகள் மற்றும் ஆசிரியா்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுபவா்கள் அவா்கள்தான். அவா்கள் இல்லாவிட்டால் பள்ளிக் கல்வித் துறை செயல்படாமல் முடங்கிவிடும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் பள்ளிக் கல்வித் துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. கல்வித் துறையை சீரழியாமல் தடுப்பதற்குக் அரசு சாா்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் விளைவுதான் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என்றாா் அவா்.

இந்தியாவைக் கலக்கப் போகும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ! 200 எம்பி கேமிரா, 7,000 எம்ஏஎச் பேட்டரி!

சிதம்பரத்தில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

உத்தரகண்ட் காங்கிரஸ் மாநிலத் தலைவராக கணேஷ் கோடியால் நியமனம்!

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 9 ஆவது இடம்!

தில்லி கார் குண்டு வெடிப்பு! உமர் அடையாளம் டிஎன்ஏ மூலம் உறுதி செய்யப்பட்டது எப்படி?

SCROLL FOR NEXT