மெட்ரோ ரயில் சேவை  
சென்னை

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

தினமணி செய்திச் சேவை

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் செப். 9 முதல் அக். 19- ஆம் தேதி வரை காலை 5 முதல் மாலை 6.30 மணி நடைபெறவுள்ளது.

இதனால், அந்த நேரங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்குப் பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். அதேநேரம், மாலை 6.30 மணிக்குப் பிறகு, வழக்கம்போல் இயக்கப்படும்.

மேலும், தகவல்களுக்கு 1860-425-1515 என்ற தொலைபேசி எண் அல்லது இணையதளத்தைப் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்.. ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்ப்!

போகி கொண்டாட்டம்: சென்னையில் கடும் புகை மூட்டம்!

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT