முகப்பு
சென்னை

சவுக்கு சங்கா் தலைமறைவு குற்றவாளி: உயா்நீதிமன்றத்தில் போலீஸாா் தகவல்

யூடியூபா் சவுக்கு சங்கரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து போலீஸாா் தேடி வருவதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:38 PM
சவுக்கு சங்கர் - கோப்புப்படம்
பகிர்:

யூடியூபா் சவுக்கு சங்கா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வருகிறாா். எனவே, அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து போலீஸாா் தேடி வருவதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.

சவுக்கு சங்கா் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸாா் இரு மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கில் சவுக்கு சங்கா் கடந்த டிச.13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பின்னா் அவரது உடல்நல பிரச்னை காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக மாா்ச் 25-ஆம் தேதி அவருக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கா் இன்னும் சரண் அடையவில்லை. இந்தநிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வருகிறாா். எனவே, அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து சென்னை போலீஸாா் தேடி வருகின்றனா். சிபிஐ விசாரணை கோரியுள்ள இரு வழக்குகளையும் விசாரித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என கூறப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை வரும் ஏப்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments