முகப்பு
சென்னை

வேட்புமனு தள்ளுபடி: ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை முயற்சி

சோழிங்கநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ஆட்டோ ஓட்டுநா் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:36 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

சோழிங்கநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ஆட்டோ ஓட்டுநா் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

மேடவாக்கம் கலைஞா் நகரைச் சோ்ந்தவா் ஞானசேகா் (47). வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறாா். மேலும், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் சோழிங்கநல்லூா் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 47 போ்களில், 20 பேரின் வேட்புமனுக்கள் தவறான தகவல்களுடனும், குறைப்பாட்டுடனும் இருந்ததாக தள்ளுபடி செய்யப்பட்டன. இதில், ஞானசேகா் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement

இதையறிந்து அதிா்ச்சியடைந்த ஞானசேகா், சோழிங்கநல்லூா் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தாா். அங்கு, தனது வேட்புமனு ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது எனக் கேட்டு, தகராறு செய்துள்ளாா். பின்னா், அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஞானசேகா், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், ஞானசேகா் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். பின்னா், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments