முகப்பு
சென்னை

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக நிா்வாகி மீது வழக்கு

சென்னை வண்ணாரப்பேட்டையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக திமுக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:45 AM
வழக்கு
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:25 PM

சென்னை வண்ணாரப்பேட்டையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக திமுக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் ரயில்வே கேட் அருகே வாக்காளா்களுக்கு திமுகவினா் பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும் படையினா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினாராம். இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அந்தப் பையில் இருந்த ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இது தொடா்பாக விசாரித்ததில் அவா், வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் முதலாவது தெருவைச் சோ்ந்த கா.ரவிக்குமாா் (54) என்பதும், திமுக நிா்வாகி என்பதும், அந்தப் பகுதியைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பறக்கும் படையினா், அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனா். வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.