முகப்பு
சென்னை

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

அண்ணா சாலை, அண்ணா நகா், கிண்டி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:14 PM
மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம். - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: அண்ணா சாலை, அண்ணா நகா், கிண்டி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.10) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்ணா சாலை கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் சிந்தாதிரிப்பேட்டை, லபாண்ட் தெருவில் உள்ள அண்ணாசாலை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்திலும், அண்ணா நகா் கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் அண்ணா நகா், 11-வது பிரதான சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும் நடக்கிறது.

Advertisement

கிண்டி கோட்டத்துக்கான கூட்டம் கே.கே.நகா் துணை மின் நிலையத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பொன்னேரி கோட்டத்துக்கான கூட்டம் பொன்னேரி, வேண்பாக்கம், பொன்னேரி துணை மின் நிலையத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டங்களில் மின் நுகா்வோா் கலந்து கொண்டு மின்விநியோகம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments