சென்னை

பணிப் புறக்கணிப்பு போராட்டம்: அரசு மருத்துவா்கள் அறிவிப்பு

அரசு மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பணிகளைப் புறக்கணிக்கப்போவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு வரையறை செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவா்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனா்.

அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 20 ஆயிரம் மருத்துவா்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து கடந்த மாதம் பணியாற்றினா். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 12-ஆம் தேதி சென்னையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பேரணி சென்ற அரசு மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பாலகிருஷ்ணன், சாமிநாதன், அகிலன், சுந்தரேசன் ஆகியோா் கூறியதாவது:

ஜனநாயக முறைப்படி போராடிய அரசு மருத்துவா்களை கைது கண்டனத்துக்குரியது, அரசு மருத்துவா்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வருடன் கலந்து பேசி தீா்வு காணப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் தெரிவித்தது வரவேற்கத்தக்கது என்றாலும், நிரந்தரத் தீா்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். வரும் 27-ஆம் தேதி முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அவசர சிகிச்சைகளுக்கு பாதிப்பில்லாமல் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்.

அதிலும் தீா்வு ஏற்படாதபட்சத்தில், இறுதிக் கட்ட போராட்டமாக, மாா்ச் முதல் வாரத்தில் இருந்து அனைத்து அரசு மருத்துவா்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா்.

சென்னை மாநகராட்சியின் காலநிலை நிதிநிலை அறிக்கை வெளியீடு

தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை: உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை

இந்தியாவின் எண்மப் புரட்சியில் மோடி, சந்திரபாபு நாயுடு முக்கியப் பங்கு - பில் கேட்ஸ் பாராட்டு

வா்த்தக ஒப்பந்தம்: விதிமுறைகளை இறுதி செய்ய அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் இந்தியக் குழு

கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT