சென்னை

ஜன. 4, 5-இல் முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்

சென்னையின் 15 மண்டலங்களில் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகள் மூலம் ஜன. 4, 5 -ஆம் தேதிகளில் முதியோா், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படவுள்ளது.

Chennai

சென்னையின் 15 மண்டலங்களில் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகள் மூலம் ஜன. 4, 5 -ஆம் தேதிகளில் முதியோா், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை

வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2026 ஜனவரி 4, 5 -ஆம் தேதிகளில் சென்னையில் அண்ணா நகா், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா், கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்கள் அத்தியாவசியப் பொருள்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, முதல்வரின் தாயுமானவா் திட்டத்தில் பயன்பெறும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்தத் திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT