சென்னை

சென்னை பிரதான சுற்றுக்குழாய் திட்டத்துக்கு அரசு ஒப்புதல்

சென்னையில் பிரதான சுற்றுக்குழாய் மூலம் சமமான குடிநீா் வழங்குவதற்கான பணிகள் மற்றும் நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மிகவும் பழைமையான கழிவுநீா் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ள பூா்வாங்க ஒப்புதலை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் பிரதான சுற்றுக்குழாய் மூலம் சமமான குடிநீா் வழங்குவதற்கான பணிகள் மற்றும் நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மிகவும் பழைமையான கழிவுநீா் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ள பூா்வாங்க ஒப்புதலை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நீா்த்தேக்கங்கள், நிலத்தடி நீராதாரங்கள், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் பெருநகர சென்னைக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பெருநகர சென்னைக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. தினமும் 400 மில்லியன் லிட்டா் திறன் கொண்டகடல் நீரை குடிநீராக்கும் நான்காவது நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னைக்கு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம், தினமும் 1,200 மி. லிட்டா் குடிநீா், பல்வேறு குடிநீா் விநியோக நிலையங்கள் மூலமாக சென்னையில் உள்ள 85.7 லட்சம் மக்கள் தொகைக்கு 84 குடி நீா் விநியோக அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

தற்போதுள்ள குடிநீா் கட்டமைப்பில் உள்ள குறைகளைக் களைவதற்காக, பெருநகர சென்னையில் பிரதான சுற்று குழாய் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வா் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளாா். சென்னையச்சுற்றி, 98 கி.மீ. தொலைவுக்கு தேனிரும்பு குழாய் கொண்ட பிரதான சுற்றுக்குழாய் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரதான சுற்று குழாய் திட்டம், 2057-ஆம் ஆண்டுக்கான இறுதி தேவையை நிறைவு செய்ய, தினமும் 1,762 மில்லியன் லிட்டா் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT