சேகர் பாபு  கோப்புப் படம்
சென்னை

ரூ.800 கோடியில் புதிய பேருந்து நிலையத்துக்கு ஜன. 29-இல் அடிக்கல்: அமைச்சா் சேகா்பாபு

சென்னை பிராட்வேயில் ரூ.800 கோடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் 29- ஆம் தேதி அடிக்கல் நாட்டி பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்

தினமணி செய்திச் சேவை

சென்னை பிராட்வேயில் ரூ.800 கோடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் 29- ஆம் தேதி அடிக்கல் நாட்டி பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதனால், தீவுத்திடல், ராயபுரம் மேம்பாலம் பகுதிகளை இணைத்து ரூ.8 கோடியில் தாற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு முன்னிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது:

வடசென்னை பகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மைல் கல்லாக சென்னையின் நுழைவு வாயிலான 75 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட பிராட்வே பேருந்து நிலைய இடத்தில் புதிய பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.800 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல்லை நாட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 29 -ஆம் தேதி பணிகளைத் தொடங்கி வைக்கிறாா்.

புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க தீவுத்திடல், ராயபுரம் மேம்பாலம் கீழ்பகுதி இடத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிகப் பேருந்து நிலையத்தில், பிராட்வே பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட அனைத்துப் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் சென்னை மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன், போக்குவரத்துத் துறை மேலாண்மை இயக்குநா் பிரபுசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பயணியிடம் பணம் திருடிய 3 பெண்களுக்கு தலா ஓராண்டு சிறை

ஜப்பான் நாடாளுமன்றக் கீழவை கலைப்பு : மக்கள் செல்வாக்கை நிரூபிக்க பிரதமா் அதிரடி; பிப். 8-இல் தோ்தல்

வையம்பட்டி அருகே 10 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

நகராட்சி கழிவுகளை பதப்படுத்த உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க தில்லி அரசு திட்டம்

வெட்டிவோ் சாகுபடிக்கு கடன் வழங்கப்படும்: ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT