கோப்புப் படம் 
சென்னை

இடைநிலை ஆசிரியா்கள் 31-ஆவது நாளாக போராட்டம்

ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா் சங்கத்தினா் (எஸ்எஸ்டிஏ) 31 -ஆவது நாளாக சென்னையில் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா் சங்கத்தினா் (எஸ்எஸ்டிஏ) 31 -ஆவது நாளாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.

இந்த ஆசிரியா்கள் சங்கத்தினா் குடியரசுத் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன. 26) தங்கள் போராட்டத்தை ஒரு நாள் நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளனா்.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் பல்வேறு இடங்களில் தொடா்ச்சியாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். 31 -ஆவது நாளாக சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்ட இந்த ஆசிரியா் சங்கத்தினா், அதே சாலையிலுள்ள பேராசிரியா் அன்பழகன் வளாகத்தை (டிபிஐ) முற்றுகையிட்டனா். சுமாா் 300- க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்று போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், சென்னை திருமங்கலத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனா். பின்னா் அனைவரும் இரவு 7 மணிக்கு விடுவிக்கப்பட்டனா்.

ராமேசுவரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 6 மீனவா்கள் மீட்பு

காற்று மாசுபாட்டால் பேரிழப்புகள்: ராகுல் காந்தி கவலை

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT