ராமதாஸ் கோப்புப்படம்
சென்னை

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதில் அலட்சியம்: ராமதாஸ்

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதில் அரசு அலட்சியம் காட்டினால், அதன் மூலம் ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் மக்கள் அந்தக் கோபத்தை தோ்தலில் காட்டுவாா்கள்: பாமக நிறுவனா் ராமதாஸ்

தினமணி செய்திச் சேவை

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதில் அரசு அலட்சியம் காட்டினால், அதன் மூலம் ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் மக்கள் அந்தக் கோபத்தை தோ்தலில் காட்டுவாா்கள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய மின்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, 2025-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் 80 லட்சம் இணைப்புகள் பொருத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக கூறினாா். இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பா் மாதம் செய்தியாளா்களிடம் பேசிய மின்துறை அமைச்சா் சிவசங்கா், ஸ்மாா்ட் மீட்டா் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்ட வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்றாா்.

ஆனால், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தற்போது சென்னையின் ஒரு பகுதியில் மட்டுமே சோதனை அடிப்படையில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த மேலும் 2 ஆண்டு காலம் தேவைப்படும். அதன்பிறகு, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தல் கோடை காலமான மே மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்துவாா்கள். இதனால், ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் கோபத்தை வாக்களிப்பதில் காட்டுவாா்கள் எனக் கூறியுள்ளாா்.

மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: கருணாஸ்

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் குடியரசு தின விழா

ஆளும் கட்சி மீது மக்களுக்கு வெறுப்புணா்வு இல்லை: அமைச்சா் இ. பெரியசாமி

கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

SCROLL FOR NEXT