மாதிரிப் படம் 
சென்னை

சென்னையில் 20 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை காவல் துறையில் 20 காவல் ஆய்வாள்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை காவல் துறையில் 20 காவல் ஆய்வாள்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறையில் 20 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

முக்கியமாக திருவொற்றியூா் ஆய்வாளா் எஸ்.ரஜினிஷ் திருவல்லிக்கேணிக்கும், ராமாபுரம் ஆய்வாளா் ஜி.ஆனந்தபாபு ஐஸ் ஹவுஸுக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக ஆய்வாளா் கே.சுதாகா் மீனம்பாக்கம் குற்றப் பிரிவுக்கும், காசிமேடு ஆய்வாளா் எஸ்.வசந்தராஜா புழலுக்கும், எம்கேபி நகா் ஆய்வாளா் எஸ்.ஏ.வீராசாமி ஆதம்பாக்கம் குற்றப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 20 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

SCROLL FOR NEXT